பொட்டை அழி
முக்காட்டைத்துற
பர்தாவை தூக்கி எறிந்துவிட்டு
நிர்வாணமாய் வா
நமக்கு முக்கிய
வேலை இருக்கிறது
இன்னும் சில மனிதர்களை
உருவாக்குவோம்.
வினைத்திட்பம்
பதிவிட்டவர்
நேர்த்தி
2
மறுமொழிகள்
குறிச்சொற்கள் தமிழ்
ஆவல்
நமது திருமணத்தின்போது
உன்னை நான்
என்னை நீ
பிறர் நம்மை
நாம் பிறரை
பார்த்ததைவிட -
எல்லோரும்
காமிராவை பார்த்தது அதிகம்
பதிவிட்டவர்
நேர்த்தி
0
மறுமொழிகள்
குறிச்சொற்கள் தமிழ்
யாவரும் கேளீர்.....
இப்பொழுதெல்லாம்
எங்கள் ஊரில்
காதலும் இல்லை
கற்பழிப்பும் இல்லை
வருவாய்க்கு உற்ற தொழில்
விபச்சாரம் என்பதால்....
யாதும் எங்கள் ஊரே.
பதிவிட்டவர்
நேர்த்தி
1 மறுமொழிகள்
உழவே தொழிலானால்....
நீர் உயர வரப்புயரும்
வரப்புயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயர கோன் உயரும்
எல்லாம் சரி...
எங்களுர் விவசாயிக்கு மட்டும்
கூன் உயரும்.
பதிவிட்டவர்
நேர்த்தி
0
மறுமொழிகள்
47 கொடுமை
அசோக சக்கரம் கூட
எந்திரலாபம் கேட்கும்
இந்நாளில்...
புரியாத மொழிப்பாட்டெல்லாம்
எனக்கு
தேசிய கீதமாய் புரியும்.
சொந்த தேசியக்கொடி
இல்லாத நாட்டில்
காற்றுக்கூட
கற்பழிக்கப்பட்டதுதான்
பதிவிட்டவர்
நேர்த்தி
0
மறுமொழிகள்
குறிச்சொற்கள் தமிழ்
மட...வெட்கம்.
கண்ணே!
நமது தேனிலவை
நிலவில் வைத்துக்கொள்ளலாம் என்றேன்.
அவளோ-
அன்று அமாவாசையாக இருக்கட்டும் என்றாள்
பதிவிட்டவர்
நேர்த்தி
1 மறுமொழிகள்
குறிச்சொற்கள் விடலை
மோனாலிசம்
எழுத முப்பத்தியிரண்டு
எழுத்திருந்தும்
ஓரெழுத்தையும் பயன்படுத்தாது
நீயெழுதிய கவிதை
தற்கொலைக்கான
இன்னொரு சாதனமாகிறது.
பதிவிட்டவர்
நேர்த்தி
1 மறுமொழிகள்
குறிச்சொற்கள் விடலை
சனவரி 25 – மொழிப் போராளிகள் நினைவேந்தல்
# பாஸ்பரசிற்கு
சரியான தமிழ்ச்சொல்-
சின்னசாமி.
தானாய் எரிந்ததால்...
# தலைவாழை இலையில்
உடலையே படையலாக்கி
தமிழிற்கு வேண்டி-
அறுசுவை உணவு படைத்தவர்களே!
நீங்கள்
பொதிகை தென்றலிற்காகவா
தீ வளர்த்தீர்கள்?
சூரியக்குளிர் போக்கவா
தீ அரங்கேற்றினீர்கள்?
# எண் சாண் உடம்பிற்கும்
தமிழே சிரசம் என்றவர்களே!
உங்களுக்கு மட்டும்
மெளன அஞ்சலி கிடையாது.
பேச - வேண்டும் தமிழ்
பேச வேண்டும்
என்றவர்கள் அல்லவா நீங்கள்.
# அந்நாளில்
காவல்துறையின் வருகைப்பதிவேடு
உங்கள் மார்புகள்.
எத்தனை அழகான கையெழுத்துகள்
குண்டு....குண்டாய்.
# தமிழிற்கு-
நெருப்பு அகழி இட்டவர்களே!
நீங்கள் காலக்கண்ணாடியை
நெருப்பில் ஏற்றி வைத்தாலும்
அதில்
தெரிவதெல்லாம் இடவல மாற்றங்களா?
இல்லை ஏமாற்றங்களா!
பதிவிட்டவர்
நேர்த்தி
1 மறுமொழிகள்
குறிச்சொற்கள் தமிழ்